Monday, September 26, 2011

how is it ? how is it ?

********************************************************
எப்படி ? எப்படி ?
*******************************************************
தரை கூரை நமதின்றி அடுக்குமனையில்
ஓர் பெட்டி இடம் வாழ்நாளில் கொண்டதே
மேய்ப்பதில் இத்தனை சிரமங்கள் எனில்
ஊருக்கு தெருவுக்கு ஒன்றென வீடு வீடாய்
சிலர் சலியாமல் குவிப்பது எப்படி எப்படி ?
இரு சக்கர வண்டிகள் இரண்டிற்கு மேல் இருந்தாலே
மூச்சே திணறிப் போகையிலே
பெரும் பல்லக்கு வடிவ உல்லாச ஊர்திகள்
உருட்டி ஊர்வலம் பலர் வருவது எப்படி எப்படி?
ஒரு வேளை உணவிற்கே ஒரு நூறு பணம் தேடுதற்கே
ஒருவன் செத்துச் சுண்ணாம்பாகையிலே
ஒரு தேநீர் கூத்துக்கே குருட்டு அறைகளிலே
சொத்தையே அழிக்கத் துணிவது எப்படி எப்படி ?
இதுபோல் நான் நடக்கையிலே பார்க்கையிலே
ஓர் பொழுதில் எத்தனையோ எப்படி எப்படிக்கள் !
எண்ணி எண்ணியே என்னுள் சிக்கலாகிக் கந்தலாகி
நூலிழையில் சாலை விபத்தில் மீண்டு வீடு வீழ்ந்தேன் !
*********************************************************************************************************
-சந்திர கலாதர்
****************************

Sunday, September 25, 2011

i am a small star in the 'milky way'

'பால்வழியில்'நானும் ஒரு சிறு நக்ஷத்திரம்
*********************************************
'பால்வழி'யிலே பிரபஞ்சக் கோடானுகோடிகளில்   

நான் ஒரு சிறு நக்ஷத்திரம்--
என் பெயர் நீ அறியாய் ;உருவமும் கூட ;
தொலைவுகளில் தொலைந்து போனவர்கள் நாம் -
இருள் நிசப்தங்களில் இணையாது இழந்தவர்கள் -
உன் அண்மைகளைவிடவும் நான் பெரியவன் என்று
எப்படி எங்கு எப்போது உனக்குப் புரியும் ?
எதுவாயினும் பிரபஞ்ச வீதியிலே நானும் சிறு நக்ஷத்திரம்;
என் துடிப்புகளும் உயிர்ப்புகளும் எனக்குப் பெருமையே !
****************************************************************************************************************
--சந்திர கலாதர்
************************************
--

looking at grass

உன் உச்சந்தலையில்
 
உள்ளங்காலால் மிதிபட்டு
 
புல்லே ! நீ மெல்ல எழுகையில்
 
போதி மரத்துப் போதனை பெற்றேன் !
 
----சந்திர கலாதர்

Saturday, September 24, 2011

false decorations

பாராட்டுப் பொய்மைகள்
 
***************************
 
பாராட்டுப் பொய்மைகள் -
 
தாக்குண்டு தாக்குண்டு
 
உட்காயங்களில் நடக்கிறேன் -
 
பொய்த்திரைகள் மென்மேலாய்
 
என்னுள் இறங்கிட இறக்கிட
 
இதயத்தின் பார்வைகள்
 
தெளிவற்றுத் திரிந்தன -
 
'அறிஞன் கலைஞன் அற்புதன்'
 
ஆயிரம் பொய்மை 'போற்றிகள்' -
 
என் புகழில் ஊறி ஊறியே
 
அகம்பாவத்தில் அழுகி மிதந்தேன் -
 
திரைகளைக் கிழித்து
 
பொய்த் தலைகளைக் கொய்து
 
எனைக் காட்டிட விழைகையில்
 
ஏற்காது துரத்தும் எச்சில் எய்தல்கள் -
 
திரைகளின் வெம்மையில்
 
புழுங்கி வியர்த்தவன்
 
நிர்வாண நடைகளில்
 
இறக்கைகள் பெறுகிறேன் !
****************************************************
 
------------சந்திர கலாதர்
 
*****************************************

Wednesday, September 21, 2011

PUSH YOUR SECRETS TO DESOLATE CORNERS

PUSH YOUR SECRETS TO DESOLATE CORNERS
&
MY DEAR GIRL!
HAVE I NOT BARED MY HEART TO YOU
HOW I SURRENDERED MY WILL AND ALL
AT THE DARING BUT SUBLIME DARTS
FROM THE TWO BOLD STARS OF HER FACE
SENDING SILENT VIBRANT INVITATIONS
TO THE FESTIVAL OF ETERNAL SPRING IN HEAVEN?
HOW I SUFFERED INSURMOUNTABLE PAIN FOR MONTHS
AS DESTINY TOOK HER LOVING HEART AWAY
LOADED WITH MY PAIN TO ANOTHER BLESSED SOUL-
YOU CAME INTO MY LIFE JUST THEN
AS A FRESH BLOOM WITH STARTLING INNOCENCE,
WHEN THE GREAT PHYSICIAN 'TIME'TRIED
ALL ITS MEDICINES IN ITS ARMOURY
TO CURE ME THE SICKNESS OF HER DOTING EYES-
YOU HAD BEEN THE TIME'S NURSE
APPLYING KINDNESS ON MY WOUNDS
AND SHOWED ME THERE IS A LIFE BEYOND DISASTER-
WHY THEN IS A SILENT TREMOR IN YOUR HEART
THAT DENIES ME THE HOLDING OF YOUR PALMS
CLOSE TO MY CHEST,SCORCHING MY PEACE?
IS MY HONESTY ON A SLOW FIRE ALL THE WHILE
IN THE SECERT KITCHEN OF YOUR HEART?
O BOYS!TENDER SEX HAVE STEELY HEARTS!
AND PUSH TOUCHY SECRETS TO DESOLATE CORNERS!

&
-----S.CHANDRA KALAADHAR

Sunday, September 18, 2011

only due to fear,o my god !

வணங்குகிறேன் ...
 
&
 
வணங்குகிறேன்--
 
பயத்தினாற்தான் !
 
'நறுக்' எனக் குட்டுகிறாய்..
 
வலியின் ' விண் 'களில்
 
உன்னை உதறி எறிகிறேன்--
 
'பாவி' ..ஒன்றைக் கொடுத்துப்
 
பலதைப் பறிப்பவன் நீ !
 
புன்னகை தந்து
 
புலன்களைப் பறிப்பவன் நீ !
 
மறுபடி பேதலித்து
 
வணங்குகிறேன் -
 
மிகும் பயத்தினாற்தான் --
 
குட்டுவதோடு விட்டாயே ;
 
வெட்டிச் சாய்க்கவில்லையே !
 
நம்மிடை உறவுகள்
 
நிச்சயம்
 
அன்பினால் அல்ல
 
அச்சத்தினாற்தான்---
 
நன்றிக் கடனும்கூட
 
கடவுளே
 
அச்சத்தினாற்தான் !
 
&
 
சந்திர கலாதர்

when i was born

பிறக்கையில்
&
பிறக்கிறேன் ...
 
சமயம் பெயரானது
 
சாதி தலையானது
 
வகுப்பு பாதமானது
 
மனம் மதம்
 
பற்றிக் கொண்டது--
 
மனிதம் மட்டும்
 
என்னுள்
 
மறைந்து போனது .
-----சந்திர கலாதர்

Thursday, September 15, 2011

gulmohar's seed-pods

gulmohar's seed-pods
since the advent of spring season in april
crores of blossoms of gulmohar
in waves after waves turned the tree top
in riotous red carpeting the green--
it is september ; the tree looks plundered-
a few flowers here and there look weary too-
a hundred or so sheathed swords
tucked into the branches are seen !
o what then was the fate of
those millions of reds that shone bright ?
were they barren, mercilessly doomed to dust,
without a vision of their posterity?
o nature ! inscrutable are your ways !
----s.chandra kalaadhar

Tuesday, September 13, 2011

CASTE FIRE

சாதீ !
&
'சாதி '--
ஓர் ஈரெழுத்துப் பயங்கரம் !
'சாகாத தீ '--
சாதி வேடம் பூண்டதோ ?
சாதியின் உள்
'சதி' உண்டுதானே !
சாதி ...
எதைச் 'சாதி'த்தது ?
'மதி'யை மிதித்துத் துவைத்தது --
ரத்தச் சேற்றில் திளைத்தது !
சாதிச் சகதியில்
இந்தியாவே சிக்கித் தவிக்குது --
காற்றிலா வெற்றிடம் கூடும் ;
சாதியிலா நெஞ்சும் உண்டோ ?
எங்கும் எதிலும் இது --
அஹ்ரிணையும் அமிழ்ந்து  போனது --
சாதிப் பூ ...சாதி மல்லி
சாதிக் குதிரை ..சாதி வைரம் !
மேடை முழங்கினான் -
"சாதி என்போரே !
உன் விரல் அவன் விரல்
முள்ளால் குத்திப் பார் -
முத்தாய் முளைக்கும் ரத்தம்
இரண்டிலும் நிறம் ஒன்றே !
எங்கேயடா வேற்றுமை ?"
கூட்டத்தில் ஓர் குரல் -
"தலை ! உளறாதே !
ஏ ,பி ,ஏபி ,ஓ +,ஓ ~..
ரத்த சாதி தெரியாதா ?"
சாதி விதைப்பதிலே
வெறுப்பிட்டு வளர்ப்பதிலே
தத்தம் வேதங்களின்
ஆணிவேர் அறுப்பதிலே
எம்மதமும் 'சம'மதமே !
'கடவுளை ஒழி !'-
ஓயாது ஊளையிட்டு
வழிபடுதலங்கள் வளர்த்ததுபோல்
'சாதி ஒழிக!'--
மூச்சை  மறந்தாலும்
இப்பேச்சை மறக்காத
ஏமாற்று வித்தகர்கள்
ஊட்டிக் கொழுத்த சாதி --
ஊரையே மேய்கிறது ;
நாடு நிணம் நாறுகிறது !
எங்கு நுழைந்திடினும்
சாதியின் சாய் பார்வை ?
சொல்லாது போனால்
விடாத துப்புத் துலக்கம்--
படிப்பு ,வேலை ,சந்து பொந்து,
வீதி, மாவட்டம் ,எங்கணும்
சாதியின் கொடு 'வால்' !
ஊரெல்லாம் உருப்படாத
சாதிச் சிலைகள் --
கேடு கெட்ட பேரணிகள்
சாதி மார் தட்டி -
சாதிக் கத்தியால்
எதிலும் எங்கும் பல வெட்டு !
மாமேதை முதல்
படு அதமன் வரை
எண்ணத்தில் சாதிப் 'பேன் '
அடை அடையாய்--
சாதியால் வழக்கு கோடி-
வட்டாட்சியில் வட்டமிடும்
ஊழலும் பலகோடி -
கண்ணெல்லாம் காட்டுத் தீ !
உதடெல்லாம் எரிவாயு !
நெஞ்செல்லாம் நச்சு -
சாலையெல்லாம் சாம்பல் !
போதுமடா சா.தீ!
சாதிக்குச் சான்றிதழா ?
ஆணிவேர் அழிக்காது
சல்லி வேரிலும் சுகம் கண்டோம் !
பிஞ்சு நெஞ்சுகளில்
சாதி நுழைந்தது எப்போது ?
பள்ளியைச் சாதி
போர்த்திய நாள்தானே !
திருக்குறள் திருடர்கள்
வாக்குப் பிச்சைக்குச்
சாதி ஓடு ஏந்திய நாள்தானே !
சாதி பேசாது
எதிலும் வாய்ப்புகள் வளர்ப்போம் --
ஒழிக என்றால் ஒழியாது--
அசுரப் போட்டிகள் அழிந்தால்
சாதி மெல்லச் சாகும் !
-----சந்திர கலாதர்

Wednesday, September 7, 2011

A POEM BY TAGORE

HE COMES--THE HERO
&
He comes-the Hero !
The world vibrates ;
Grass blades thrill;
Conches blare in heaven;
Gongs sound on earth
This is the great birth !
Forts of moonless night
Shatter and fall apart .
Brimming with new hopes ,
Dawn on hiltops sings,
"Do not fear !do not fear !"
And the cosmos reverberates
"Hail the New Man!"
---RABINDRANATH TAGORE
அவன் வருகிறான் --
நாயகன் வருகிறான் !
உலகமே அதிர்கிறது !
புல்லிதழ்கள் பூரிக்கின்றன -
சுவர்க்க சங்கங்கள் முழங்குகின்றன -
மண்ணில் மணிகள் சப்திக்கின்றன -
ஆஹா ..பெரும் ஜனனம் இதுவல்லவோ !
நிலவற்ற இரவுக் கோட்டைகள்
தகர்ந்து பொடியாகின்றன --
புது நம்பிக்கைகள் பொங்கிட
"அஞ்சேல் ! அஞ்சேல்!" என
மலைச்சிகரங்களில்
'வைகறை ' பாடுகிறது -
"வாழ்க புது மனிதன்!"என
பிரபஞ்சம் எதிரொலிக்கின்றது .
&
மொழி மாற்றம் ...சந்திர கலாதர்

Sunday, September 4, 2011

MOTHER THERASA

அன்னை தெரசா
&
தெய்வமாய் நீ ---
கருணை முகம் காண்கிறேன்
கைகூப்பி நிற்கிறேன்--
ஆசி தரும் தெய்வமே
எனக்குக் கைகூப்பினால்--
மாசுடை நான்
திடுக்கிடுகிறேன் -
உன் கண்களின் அழைப்பு
என் பாதங்களின் தயக்கம்
நெருங்க முடியவில்லை தாயே !
என் கண்களில் கசிவுண்டு
ஆனால் அருட் பெருக்கில்லை --
சொல்லில் இதமுண்டு
ஆனால் செயலில் வளமில்லை-
உன்போல் கருணை
ஒரு சிலர்க்கே ஆகுமோ ?
----------சந்திர கலாதர்