Monday, December 5, 2011

இதென்ன கொலவெறி கொலவெறியோ /
&
மூன்று வயதுக் குழந்தைக்கு
இது மட்டும் புரிவதாயில்லை --
எதற்கு இந்த ப்ரீ -கேஜி ,எல் -கேஜி எல்லாம்?
இதென்ன கொலவெறி கொலவெறியோ ?
விழித்தது முதல் கண் விழுவோரை எல்லாம்
ஒரு பரிதாபக் கெஞ்சலுடன்
"இன்னிக்கு ஸ்கூல் இல்லை.. இல்லையாம்மா?
இல்லையாப்பா?என்ன தாத்தா ?
பாட்டீ! இல்லைதானே ?" எனும்
நம்பிக்கையற்ற குரலுடன்
'ஆம்' என்ற கிடைக்காத ஒரு சொல்லுக்காய் ஏங்கி
பாவம் என்னமாய்த் தவிக்கிறது !
அதை மீறி எல்லாமே மிதித்து நடக்கிறது -
இவர்கள் பாசம் எல்லாம் பொய்தானோ ?
கண்ணீரில் கரையாத கற்களோ இவர்கள் ?
முடியுமட்டும் முரண்டு பிடிக்கிறது -
ஒரே வாக்கியம்தான் திருப்பித் திருப்பிச் சலியாது--
"அம்மா ! இன்னிக்கி ஸ்கூல் இல்லேம்மா !"
கெஞ்சல் கொஞ்சல் மிரட்டல் ஆராதனைகள் பின்
ஆடைக்குள் திணிக்கப்பட்டதும்
வாழ்வே இருண்டு வாழ்வும் புரிந்து
கசாப்புக்கடை ஆடாய் கை இழுப்பில்
இல்லாத கொடிய ஸ்கூலுக்கு
வெறித்த விழியில் உயிரற்று நடக்கிறது !
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment