Tuesday, December 4, 2012


No hesitation whatsoever in admitting

‘Made with inconsistencies and deficiencies’

Never I crowed “I am blemish-free!”

Daily I attempt to repair myself honestly

Though with only limited success;

I slip and slide down in sincere trials

And my soul is full of bruises, you may not know-

Don’t tease me then with unkind words;

The winds of events settle fine dust on me.

Though may be far, far from me the truth

I struggle with my might to crawl closer to it.

I laugh at myself, reminded of endless attempts

But take courage that I rise up again and again;

I am still a raw rock face with craggy contours-

I will one day discover in its chiseled depths

My ‘ I ‘ , the faint xerox of perfection  !

---s.chandra kalaadhar

04.12.2012 / Tuesday / kaarththikai 19    

Thursday, November 15, 2012

 
வெகு நாட்களுக்குப் பின் உதய வேளையில்
 
திறந்த வான் மூழ்கி --
 
விடிந்தும் விடியாத ' சில் ' பொழுது --
 
மௌன நேரத்தில் பறவை அழைப்புகள் அங்குமிங்குமாய்
 
சிறுசிறு நீர்க்குமிழ்கள்போல்--
 
கிழக்கு மெதுவாக வெண்மை பூசிக்கொள்கிறது --
 
சரியாக 45 டிகிரி கோணத்தில் உயரே விடி வெள்ளி விழித்துப் பார்க்கிறது .
 
அதுபோல் வடமேற்கு மூலையில் அதே ' பளிச்'சில் மற்றொன்று ;
 
அது ஒரு வேளை வியாழனோ ?
 
மேலைக் கோடியிலிருந்து ஒரு ' ஜெட் ' விமானம் சப்தமின்றி
 
வானிற்கு ஒரு இடுப்புக் கச்சை இழுத்துக் கட்டி வருகிறது
 
சில நிமிடங்கள் கடந்து மற்றொன்று அதே திசையில் -
 
வானம் கிழக்கே வெட்கி கனிகிறது
 
ஒரு பலூனுள் காற்று அடைப்பதுபோல்
 
' கும்கும் ' என்று ஒளி திசைகளை நிரப்புகிறது .
 
தன மகளின் பின்னலை அவிழ்த்து வாரிவிடும் தாய் போல்
 
காற்று 'ஜெட் 'டின் கூந்தலைக் கோதி நீவி விடுகிறது.
 
கடைசியில் அது அணில் பட்டைவால் போல் ' புசுபுசு ' என்றாகி விடுகிறது .
 
இரு ஒளிக் கிரகங்களும் மெல்லப் புதைகின்றன .
 
தேடுகையில் விழிகள் தோற்கின்றன .
 
வேப்ப மரக் கூந்தல்களில் இரு அழகான பசுங்கிளிகள் -
 
சிறகை மெல்ல விரிக்கையில் செம்மஞ்சளோடிய மந்திரப் பச்சை!
 
நாசூக்காய் மெல்லக் குனிந்து வேப்பம் பழங்களை
 
அவை விரும்பி ருசிக்கையில் ஒரு புதிய சேதியும் அனுபவமும் ஆகிறது.
 
அவை செல்லும் வரை நான் சிலை ஆகிறேன் .
 
எனக்கு என் வீட்டுத் திறந்த மாடி தரும் சுகம் ,கற்பனைகள் , தோற்றங்கள்
 
வேறு எந்தப் பூங்காக்களிலும் என்னை அண்டுமோ ?
 
இங்கிருந்து என் பார்வை நீந்தலில்
 
ஒரு அழகிய தொழுகை மாடமும் கண்ணன் கோவில் கோபுரமும் !
 
சுற்றி மிதக்கும் புறாக்கள் -
 
திடீர் திடீரென வானில் அலை விரிவாய் மிதந்து உயரே
 
அமைதியாய்ப் பயணிக்கும் நீர்ப் பறவைகள் !
 
மரத் துண்டுகள் போல் அடிக்கடி முனகிச் செல்லும் விமானங்கள் --
 
உதய அந்தி வேளைச் செஞ்சூரியன்கள்--
 
உதடுகளில் கானம் ஏந்திய காற்று
 
காலையில் ' சில் 'லாய் மாலையில் ' ஜில் ' லாய் !
 
என் இரு பொழுதுகளுமே மிக இனிமையானவை !
 
 
---சந்திர கலாதர்
 
16.11.2012 / வெள்ளி / கார்த்திகை 1
 
காலை மணி 8 /அண்ணா நகர்
 
--
S.CHANDRA KALAADHAR
 

Sunday, March 11, 2012

அதோ ஒரு மரம் நிற்கிறது -
 
அல்ல ..ஒரு உயிர் அல்லவோ அழைக்கிறது !
 
இலைகளில் இசையாய் அழைக்கிறது
 
செவிடாய்ச் செல்ல முடியாது ;
 
மரத்தோடு மணிகள் மறந்திடுமோ ?
 
என்னால் எளிதில் முடிகிறதே !
 
மரத்தின் மொழிகள் நான் அறிவேன்
 
மரத்திடம் முதலில் எனைக் கொடுப்பேன்
 
முழுதாய்ப் பின் அது தனைக் கொடுக்கும்
 
என்னதான் மரத்துடன் பேசுதற்கு ?
 
ஓ...பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறதே !
 
எத்தனை நிகழ்வுகள் அதன் காலடியில் ,
 
உயர் கண் வீச்சுகளில் ,கால ஓட்டங்களில் !
 
மரத்தடியில் அமர்கின்றேன்
 
அன்பாய் அதனை அணைக்கின்றேன்
 
கிளைகளைக் கருணையில் வருடுகிறேன்
 
பச்சிலைகளில் பாசம் காட்டுகிறேன்
 
மலர்களை உச்சி முகர்கின்றேன்
 
நறுமணம் நெஞ்சில் பரவுகிறேன்
 
நட்பை நலமாய் விரிக்கின்றேன்
 
மண்ணுள் உழன்று வியர்த்திருக்கும்
 
வேர்களுக்கும் அன்பை விசிறுகிறேன்
 
மல்லாந்து அதன் மடி படுத்தபடி
 
தலை அணையாய்க் கை சேர்க்கின்றேன் -
 
மென் காற்றால் எனை மெதுவாக்கி
 
பூஞ்சாரலிலே எனை ஆசித்து
 
நேசமுடன் பழம் கதைகள்
 
நேர்த்தியாய் என்னிடம் பகிர்கிறதே !
 
மனிதரோடு பறவைகளின்
 
காதல் கூடல் பிரிதல் எனும்
 
காதற்காவியங்கள் கணக்குண்டோ !
 
பிரிந்திட எனக்கும் மனமில்லை -
 
பைத்தியம் என நீ நினைத்தால்
 
அதற்கு நான் பொறுப்பில்லை !
 
மரம்தனைப் பார்த்தால் மாறுகிறேன்
 
மறு பிறவி நான் எடுக்கின்றேன் !
 
 
 
 
----சந்திர கலாதர்
when you stood hiding in a remote dark corner
and stealthily gazed at the sun full of  love
you looked lovely in full splendour charming the world-
but when you gathered the boldness and appeared before the sun
to declare your deep love in open light
what makes you so pale and dissolve your strong self, o moon?


--s.chandra kalaadhar

Friday, March 9, 2012

அவர்கள் சிறு கிராமத்தில் வாழ்பவர்கள்
 
குண்டும் குழியுமே இணைக்கும் சாலை
 
புழுதியும் புதருமே வரவேற்புத் தோரணங்கள்
 
ஊருக்கே ஒரு கிணறும் ஒரு அடி பம்ப்பும்
 
ஒன்றும் வற்றிப் போனது மற்றது முறிந்து போனது
 
குடம் குடிநீருக்காய் நாளும் நடையாய்த் தொலைவுகள்
 
பள்ளியும் இல்லை மருத்துவ நிலையமோ பல கல் தொலைவில்
 
இவர்கள் எளியவர்கள் இதெல்லாம் குறை என்றே புரியாதவர்கள்
 
எவரிடம் சொல்வது ?எவர் காது தருவார் ?
 
எவர் வந்து பார்ப்பார் ?எதுவுமே தெரியாதவர்கள் -
 
தண்ணீர் இல்லையா? நடந்தே தேய்வார்கள்
 
சாலை இல்லையா? செத்தே மடிவார்கள்
 
ஆனால் எவரிடமும் சொல்லி அறியார்
 
சொன்னால்தான் செய்யத்தான் போவார்களா ?
 
இவர்கள் இருளில் வாழ்பவர்கள்; அநீதி என அழவும் தெரியாதவர்கள்
 
மின்சாரம் வழி தவறி வந்தால்தான் தெரு வெளிச்சம்
 
நமக்கு அவ்வளவுதான் என்று நிறைந்தவர்கள்
 
இக்கிராமம் பெயர் சொல்லி ஜீப்பில் அலையும் அரசினர்
 
இவ்வூருக்குள் நுழைந்ததே கூடக் கிடையாது
 
சாலை போட்டதாய்ச் சொல்லிப் பணம் தின்ற பிணங்கள் உண்டு
 
வெள்ளாடை மருத்துவரை இவர் எங்கே கண்டார் ?
 
பிறந்து விட்டனர் என்பதாலேயே இங்கே வாழ்கின்றனர்
 
முதல் பிற அமைச்சர்களை வெறுங்காலில் பொட்டை வெயிலில்
 
மொட்டைத் தலையினராய் நடக்கவிட்டுப் பார்க்க ஆசை -
 
கிடையில் அடைபட்ட ஆடுகளாய் சிறு கிராமத்தின் மக்கள் அந்தோ !
 
என்று விடியும் இவர்கள் இருட்குடில்கள் ?
 
என்று எரிக்கும் இவர்கள் மௌனம்?
 
 
 
-----சந்திர கலாதர்

Friday, February 10, 2012

மனநலம் இழந்த பெண்
 
&
 
பெண்ணே !
 
எங்கே உன் பார்வை தொலைந்து போகுது ?
 
எந்த சோகம் தன்னுள் மூழ்கி போகுது ?
 
எங்கே உன் மனது தேங்கிப் போனது ?
 
என்ன என்ன எண்ணம் எல்லாம் உன்னுள் குவியுது ?
 
அவற்றில் எது ஒன்று உன்னில் முறுவல் பூக்குது ?
 
எது ஒன்று உனைக் கோபம் தள்ளுது ?
 
எதுவம்மா  உன்னைச் சிரிக்க வைக்குது?
 
உன் உலகை உனக்காக நீ படைத்தாயோ ?
 
கடவுள் தந்த இவ்வுலகம் போதவில்லையோ ?
 
இவ்வுலகம் என்று தாயே நீ திரும்பப் போகிறாய் ?
 
ஏளனங்கள் இகழ்ச்சிகள் என்று விரட்டப் போகிறாய் ?
 
படைத்தவனிடம் என்னதான் பேசுகிறாயோ ?
 
பெற்றவளின் நெஞ்சம் இங்கு நொந்து போகுதே -
 
இந்த நோய்க்கு மருந்தேதும் உலகில்  இல்லையோ ?
 
 
---சந்திர கலாதர்          

--

Sunday, January 15, 2012

i was born when cameras were a luxury

i was born when cameras were a luxury
 
&
 
i was born when cameras were a luxury
far removed from the middle-class homes-
no faded and moth-eaten photographs
to spring memories of my lost childhood
from those frozen frames-
what were my thoughts and fancies then?
memories are blind and dumb
till i was six years old-
none cared too to remember my acts 
to retell when i yearned to learn about my baby life--
really sad that i am unaware of those casual days
when life was given no special importance ,
soaking in flashes of lights--
who knows what i prattled
and how i spent my idle hours in play--
o how many years of autobiography
have i  lost in dim darkness ?
must be the same for every guy of my age-
o time ,walk back in slow steps into my toddler's days;
reveal me the imprints of my kid steps on your sands-
as i ripen in age,the hunger grows more for my baby years !
 
 
-----s.chandra kalaadhar